நேற்று புதன்கிழமை 28.07.2021 புத்தளம் MOH பிரிவுக்குட்பட்ட 607/D கிராம சேவகர் பிரிவில் உள்ள புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு), றஸூல்நகர், பொத்துவில், அக்கர காள ஆகிய கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி காலை 08:00 மணிதொடக்கம் இரவு11:00 வரை செலுத்தப்பட்டது.
சுமார் இரண்டாயிரம் பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புத்தளம் பொது சுகாதார பரிசோதகர் திரு. சேனநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து தறுவிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகளே முதல் கட்டமாக புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வைத்து நேற்றைய தினம் செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், நீண்ட வரிசையில் நிதானமாக நின்று இரவு 11.00 மணி வரை தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதற்காக eNews1st குழுமம் எமது மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
இதேவேளை நேற்றைய தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகளை முகப்புத்தகம் வாயிலாக மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்ததன் ஊடாக, தடுப்பூசி செலுத்துவதற்கு தயங்கிய மக்களும் தாமாக முன் வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக சமூக ஆர்வளர்கள் eNews1st குழுமத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கிய சமூக ஆர்வலர் அல் ஹாஜ் C.M.அஸீஸ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பாடசாலைஅதிபர், ஆசியர்கள், eNews1st குழுமத்தினர், EPD குழுவினர், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத Volantier சேவையில் ஈடுபட்ட முதியவர்கள் இளைஞர்கள் என அணைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக புத்தளம் தள வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியரும், பு/எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உப தலைவருமான அல்ஹாஜ் Dr. K.Asfar (MBBS) எமது இயைத்திற்கு தெரிவித்தார்.
அத்தோடு எமது பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அதிகாரி, புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள் என அனைவரும் தனது விசேடமான நன்றிகளைத் தெறிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் முதல் கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக எதிர்வரும் மாதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.