புத்தளம் எருக்கலம்பிட்டி அஹதிய்யா பாடசாலையில் இன்று 23.10.2022 ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்கு ஒன்று புத்தளம் எருக்கலம்பிட்டி பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
எதிர்வரும் மாதம் நடைபெற இருக்கும் அஹதிய்யா பாடசாலைகளுக்கான வருடாந்த இடைநிலை பரீட்சையை நோக்காக கொண்டு நடத்தப்பட்ட இன்றைய இலவச கருத்தரங்கில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான புத்தளம் எருக்கலம்பிட்டி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
புத்தளம் எருக்கலம்பிட்டி அஹதிய்யா பாடசாலையின் அதிபர் ஜனாப் பஸ்மி அவர்களின் வழிகாட்டலினால் புத்தளம் எருக்கலம்பிட்டி பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் இரண்டு இலவச கருத்தரங்குகள் இடம்பெற்றது.
இதில் தரம் 9,10 மற்றும் 11 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், வருடாந்த இடைநிலை பரீட்சை தொடர்பான சிறந்த வழிகாட்டலும் ஆலோசனைகளும் வளவாளர்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
மேலுமொரு இலவச கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.