நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களுக்கான மற்றுமொரு நிவாரண உணவுப்பொருட்கள் அடங்கிய ஒருதொகை உணவுப்பொதிகளை புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீசா அவர்கள் இன்று புத்தளம் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொண்டார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களுக்கு மேலும் நிவாரணப் பொருட்கள் தேவை என புத்தளம் பிரதேச செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் S.P. வீரசேகர அவர்களிடம் கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீசா அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறித்த நிவாரண உணவுப்பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.
இதில் 1300 கிலோ கிராம் சீனி, 1300 கிலோ கிராம் பருப்பு மற்றும் 1300 பக்கட் நூடில்ஸ் (கொத்து மீ) அடங்கிய உணவுப்பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.
மேலும் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் நாகவில்லு பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுளளதாக உதவி அரசாங்க அதிபர் அவர்களிடம் தெரிவித்த ஷாஹின் ரீசா, இதற்கு மேலதிகமாக அரிசி பொதிகளும் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கைக்கு இணங்கிய உதவி அரசாங்க அதிபர், வெகு விரைவில் நாகவில்லு பகுதிக்கு அரிசி பொதிகளும் வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பொத்துவில் வட்டாரத்துக்கான பிரஜாசக்தி தலைவர் MJM. சிராஜ் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





