Thursday, November 21, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லு பகுதியில் உலர் உணவு வினியோகம்!

நாகவில்லு பகுதியில் உலர் உணவு வினியோகம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் புத்தளம் எருக்கலம்பிட்டியில் வறுமையில் வாடும் மக்களுக்கு பு/எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தொழில்களையும் வருமானங்களையும் இழந்து கஷ்டப்படும் பு/எருக்கலம்பிட்டி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் பள்ளிவாசல்
நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் I. அன்சார், (முன்னாள் இலங்கைத் தூதுவர்) அவர்களின் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பங்களிப்புடன்,
விநியோக்கப்பட்டன.

சுமார் 4,000/- ரூபா பெறுமதியான , அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, கடலை, பால்மா, தேயிலை, பப்படம் போன்ற 21 கிலோ எடை கொண்ட உணவுப் பொருட்கள் 1092 குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த முயற்சிக்காக, கொழும்பிலும் இதர நகரங்களிலும் வசிக்கும் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்களும், தொழில்சார் நிபுணர்களும், அரச மற்றும் தனியார் துறைகளில் உயரிய பதவிகளை வகிப்பவர்களும் தாராளமாக தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

உலர் உணவு நன்கொடையாளர்களின் வேண்டுகோளின் பேரில் வருமானமின்றி் கஷ்டப்படும் மக்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படடன. இம்முறை நிரந்தர வருமானம் பெறும் அரசாங்க, தனியார் துறை உத்தியோகத்தர்களுக்கும் சொந்தமாக கடைகளை வைத்திருக்கும் தனவந்தர்களுக்கும், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், இந்த பணிக்காக நிதி உதவி செய்தவர்களுக்கும் இம்முறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் கடந்த பல நாட்களாக இந்த நற்பணியில் ஈடுபட்டு இதன் வெற்றிக்காகவும் நேர்மையான – நீதியான முறையில் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் அரும் பாடுபட்டுள்ளனர்.

இத்தகைய அளப்பரிய சேவையை ஆற்றிய பள்ளிவாசல் நிர்வாக சபையினருக்கும் இதற்காக நிதி உதவியளித்த எருக்கலம்பிட்டி பரோபகாரிகளுக்கும் எருக்கலம்பிட்டி மக்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

புத்தளம் மனித உரிமை மேம்பாட்டாளர், சகோதரி ஜுவைரியா அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,

நாகவில்லு-எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை புத்தளம் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிவாசல்களுக்கு ஒரு முன்மாதிரியாக இந்தப் பணியை திறம்பட ஆற்றியுள்ளதாகவும், மற்ற பள்ளிவாசல்கள் இவர்களின் இத்தகைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த அளப்பரிய சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கொரோனா பயணத்தடை நீங்கியதும் விசேட துவா பிரார்ந்தனை ஒள்றை நாகவில்லு – எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகசபையினர் தெரிவித்தனர்.

இவர்களது இதுபோன்ற நற்பணிகளும் மக்களுக்கு பயன்தரும் வேலைந்திட்டங்களும் மென்மேலும் தொடர வேண்டுமென நமதூர் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular