அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து சதகதுல் ஜாரியா நிரந்தர நன்மையான உதவியொன்று புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் இன்று (10.02.2025) அடையாளப்படுத்தப்படாத பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியே குறித்த பரோபகாரி ஒருவரினால் செய்யப்பட்டுள்ளது.
1000 லீட்டர் தண்ணீர் தாங்கி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படும் என அடையாளப்படுத்தப்படாத குறித்த பரோபகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது வாழ்நாள் முழுதும் தண்ணீர் தாங்கியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்புவதற்கான முழுப் பொறுப்பையும் குறித்த பரோபகாரி ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தாம் யார் என்பதை வெளிப்படுத்தாமல் குறித்த தண்ணீர் தாங்கியை பாடசாலைக்கு இரகசியமாக வழங்கியுள்ளதாக பாடசாலை அதிபர் திரு S.M. ஹுஸைமத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
மேலும் இப்படியாப்பட்ட ஒரு முன்னுதாரணமான உதவியை செய்த குறித்த பரோபகாரிக்கு பாடசாலை சமூகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


