Sponsored Advertisement
HomeERUKKALAMPIDDYநாகவில்லு பாடசாலையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நாகவில்லு பாடசாலையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் SM ஹுஸைமத் அவர்களின் தலைமையில்  இன்று புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வெளியாகிய சுமார் 23 வகுப்பாண்டுகளுக்கிடையான சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற  புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கிடையிலான நோக்கவுட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் 2004 ஆம் ஆண்டு அணியினர் சாம்பியன் கிண்ணம் வென்றனர்.

மிகவும் திறமையான பல அணிகள் பங்குபற்றிய குறித்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், 2004 ஆம் ஆண்டு வகுப்பு அணி மற்றும் 2011 ஆம் ஆண்டு வகுப்பு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2004 ஆம் ஆண்டு வகுப்பு அணி 7 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 2004 ஆம் ஆண்டு வகுப்பு அணி சார்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் தலைவர் A. அன்சபினால் அதிகப்படியான ஓட்டங்கள் எதுவும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது.

28 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2011 ஆம் ஆண்டு வகுப்பு அணி 7 ஓவர்கள் நிறைவில் வெறும் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஓட்ட எண்ணிக்கையை சமன் செய்தது.

இதில் அதி சிறப்பாக பந்து வீசிய J. சப்ரின் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றி போட்டியை சம நிலைக்கு இட்டுச்சென்றார்.

இரு அணிகளும் ஒரே ஓட்ட எண்ணிக்கையை பெற்றதால் சூப்பர் ஓவர் வீசப்பட்ட தீர்மானிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2011 ஆம் ஆண்டு வகுப்பு அணி 2004 ஆண்டு வகுப்பு அணி பந்து வீச்சாளர் J. சப்ரினின் துல்லியமான பந்து வீச்சில் 1 விக்கட் இழப்பிற்கு 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

4 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய 2004 ஆண்டு வகுப்பு அணி முதல் பந்திலே சிக்ஸர் அடித்து வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.

வெற்றிபெற்ற அணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் NM ஷாபி மற்றும் தற்போதைய அதிபர் SM ஹுஸைமத் ஆகியோரினால் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

தொடரின் அதி சிறந்த வீரராக 2 அரைச்சதங்கள் பெற்ற 2004 அணியின் தலைவர் A. அன்சப் தெரிவுசெய்யப்பட்டார். 

மேலும் தொடருக்கான சகல நினைவுச்சின்னங்களும் சுங்கத்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் அல்ஹாஜ் லுக்மான் சகாப்தீன் அவர்களினால் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சசமாகும்.

Exit mobile version