இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் 9 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதில் முஹம்மத் அர்சத் ருகையா என்ற மாணவி அதிகூடிய புள்ளிகளாக 154 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் முஹம்மத் அர்சத் ருகையா 154 புள்ளிகளையும், முபீன் முசாப் அஹமத் 148 புள்ளிகளையும், ஜிப்ரி ஹிக்மா 147 புள்ளிகளையும், ரமீஸ் அபான் அஹமத் 143 புள்ளிகளையும், சிபாத் பாத்திமா அபா 140 புள்ளிகளையும், ஹாரிஸ் அப்துல்லாஹ் ஹசன் 139 புள்ளிகளையும், சுஜாவு ஷான் அஹமத் 138 புள்ளிகளையும், அபீக் அஹமத் 132 புள்ளிகளையும், வாசிப் பாத்திமா அனீகா 131 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.
மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.