உள்ளூராட்சிமன்ற தேர்தல், புத்தளம் பிரதேசபக்கான பொத்துவில்லு வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீத் இன்று புத்தளம் பொலிஸாரினால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
119 போலீஸ் அவரச பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீத் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.
இன்றைய தேர்தல் பிரச்சாரங்களுக்காக வாகனத்தில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்தமையினால், மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தினார் என்ற அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே குறித்த வேட்பாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் வாகனங்களில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது சட்டத்திற்கு முரணான நிலையிலேயே, குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட புத்தளம் போலீசார், மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த வேட்பாளர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
