அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பு/நாகவில்லு கிளையின் மிகப் பிரமாண்டமான ஒன்று கூடல் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் M.J ஷாஹீன் றிஸா தலைமையில்
நேற்று (10-August-2025 ) புத்தளம் ZEINS POOL இல் மதிய விருந்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான ஊர் பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நேற்றைய ஒன்றுகூடலில் நாகவில்லு கிராமத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஆராய்ந்து எவ்வாறு நிவர்த்தி செய்வது போன்ற பல விடயங்கள் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது.
எதிர்காலத்தில் நாகவில்லு கிராமத்தில் பாதைகள், வீதி விளக்குகள், மதகுகள், போன்றவைகளை சீர் செய்வது, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடாத்துவது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு விஷேட மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொடுத்தல், மருத்துவ முகாம்கள் நடாத்துவது, போன்று இன்னும் பல விடயங்கள் பேசப்பட்டன.
புத்தளம் பிரதேச சபையினால் முடியுமான சகல உதவிகளும் பு/நாகவில்லு பகுதிக்கு கிடைக்கும் என நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய த்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நிமல் பமுனு ஆராய்ச்சி தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் கௌரவ NTM தாஹீர், புத்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நிமல் பமுனு ஆராய்ச்சி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாகவில்லு கிளை ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
