மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75
மில்லிமீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்று நிலைமைகளின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.