திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினால் அதற்குரிய காசோலை நேற்று 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் நேரில் சென்று சந்தித்ததுடன், தன்னால் முடிந்த நிவாரண உதவிகளை செய்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




