ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார பணிக்காக புத்தளத்திற்கு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் புத்தளம் பிரதேச சபை, பொத்துவில் வட்டார எருக்கலம்பிட்டி, நாகவில்லு தேர்தல் பிரச்சார அலுவலகத்தை இன்று அவர் (11) திறந்துவைத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாகவில்லு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கட்சியின் தனித்துவத்தை காக்கும் ஒரு முன்மாதிரி புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமம் என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
காத்தான்குடிக்கும், மன்னார் எருக்கலம்பிட்டிக்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
கல்வித்தந்தை cww கன்னங்கரா அவர்களினால் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய கல்லூரி அன்றைய காலகட்டத்தில் மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கும், அதே போன்று காத்தான்குடி பாடசாலைக்கும் மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக நினைவுகூர்ந்தார்.
அதே போன்று முன்னாள் வன்னி பாராளுமன்ற அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் தனது பாராளுமன்ற நண்பர் எனவும், கட்சிக்காக அரும்பாடுபட்ட ஒரு கட்சியின் முக்கியஸ்தர் எனவும் தெரிவித்தார்.
கடந்த முறை பொத்துவில்லு தொகுதியில் இழந்த கட்சி ஆசனத்தை இம்முறை நிச்சயமாக ஈடுசெய்யவேண்டும் எனவும், அதற்காக ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியத்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமாய் குறிப்பிடத்தக்கது.




