Sponsored Advertisement
HomeWorld Newsநிஜ்ஜார் விவகாரம்.. ஐநா வரைக்கும் கொண்டு சென்ற கனடா

நிஜ்ஜார் விவகாரம்.. ஐநா வரைக்கும் கொண்டு சென்ற கனடா

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை சாடி வரும் கனடா, ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தியாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளது.

தங்கள் மண்ணில் அந்நிய தலையீடு இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது.இந்தியா-கனடா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தான். கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலைகளுக்கு பின்னணியில் இந்திய ஏஜெண்ட்களின் பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. இந்தியாவுக்கு பங்கு இருக்கலாம் என்று கனடா சொல்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அதேபோல், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதற்கிடையே கனடா விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குவதகாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.50 முறை துப்பாக்கிச்சூடு.. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை குறித்த சிசிடிவி காட்சிகள்? பரபர தகவல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்கள் எதையும் கனடா வழங்கவில்லை என்று இந்தியா கூறியிருந்தது. ஆனால், கனடா பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது என ட்ரூடோ கூறினார். இவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை மோதலும் தடித்து வருகிறது.

இப்படி மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கனடா இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் நடந்து வருகிறது.அதாவது, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில், இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடும் வகையில் கனடா சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான கனடா தூதர் போப் ரே கூறியதாவது:-

அந்நிய நாடுகளின் தலையீட்டால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியல் தேவைகளுக்காக அரசுகளுக்கு இடையேயான விதிகளை வளைக்க முடியாது.அதே நேரத்தில் சமத்துவத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் மதிப்புகளை நாங்கள் உறுதி செய்ய வேண்டியும் உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால் நாங்கள் ஏற்றுக்கொண்ட விதிகளை பின்பற்றாமல் இருந்தால் எங்களின் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான சமூகத்தின் திரை கிழிக்கப்படும் என்றார்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடாவை சாடும் வகையில் பேசினார். ஜெய்சங்கர் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசியல் வசதிக்காக தீர்மானிக்கக் கூடாது என்று சாடியிருந்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஜெய்சங்கரின் இந்த உரை இருந்தது.

Exit mobile version