Saturday, May 17, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநினைவேந்தலில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பி!

நினைவேந்தலில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பி!

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் தமிழரசுக்கட்சியின் இராமநாதபுரம் வட்டாரத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும், வட்டக்கச்சி வட்டாரத்தின் ஏற்பாட்டில் ஆறுமுகம் வீதி சந்தியிலும் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றிருந்தார்.

ஈழத்தமிழ் தேசிய இனமான நாம் இந்த மண்ணிலே நீண்டகாலம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டோம். 1954 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர் மீதான பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றன என நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றிருந்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டின் பல பகுதிகளில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் தர்மத்தின் வழி நாங்கள் ஒரு தீர்வை எட்டிக்கொள்ளலாம் என எமது தலைவர்கள் கருதிய காலத்தில் எங்களைப் பாதுகாக்க ஆயுதங்களுக்கு பதில் வேறொண்டும் இல்லை நிலையிலே ஆயுதங்களை ஏந்தினோம்.

பல்வேறு விடுதலை இயக்கங்கள் ஆயுதங்கள் ஏந்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையே நீண்ட விடுதலைப் போராட்டத்தை கொண்டது.

இந்த காலத்தில் பல படுகொலைகள் இடம்பெற்று முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு வந்தது. பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல இலட்சம் மக்கள் இருந்த போது 70,000 மக்கள் தான் உள்ளார்கள் என தெரிவித்து உணவளித்து ஏனையோரை பட்டினியால் கொண்டனர்.

அதனை விட கொத்தணி குண்டுகளால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை நடந்து 16 வருடம் ஆகியிருந்தாலும் சிரட்டையில் கஞ்சி என்பது உணவுக்காக மக்கள் கஷ்டப்பட்ட காலத்தில் பெரிதும் உதவியது. அந்த கஞ்சி குடித்த சிறுவர்களையே கொன்றது. இலங்கை அரசு சிரட்டை கஞ்சி என்பது எங்களோடு வாழ்ந்தவர்களின் ஆத்மாவாக நினைக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular