கல்பிட்டி கல்வி வலயத்திற்குற்பட்ட நிர்மல மாதா பாடசாலைக்கு குறைபாடாக இருந்த நிரந்தர அதிபர் பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரி கல்பிட்டி கல்வி காரியாலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிரமல மாதா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றார்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி அமைதியான முறையில் கல்பிட்டி கல்வி காரியாலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனை கேள்வியுற்ற புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் விரைந்து செயற்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடி நிரந்த அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை ஒரு தற்காலிக அதிபரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த கோரிக்கைக்கு செவிசாய்த்த கோட்ட கல்வி பணிப்பாளர் ஜவாத், தற்காலிக அதிபரை நியமிக்க வாக்குறுதி வழங்கியதுடன், விரைவில் ஒரு முழு நேர நிரந்த அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகும் உறுதியளித்துள்ளார்.
குறித்த விடயத்திற்காக விரைந்து செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றார், பாடசாலை அபிவிருத்தி குழு நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



