திருகோணமலை கடற்படை தளத்தில் நீருக்கடியில் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெற்றது.
இலங்கை கடற்படையின் மலிமா சேவையைச் சேர்ந்த, மலிமா சுழியோடி சங்கம் (Malima Diving Club) மற்றும் கடற்படை சுழியோடி பிரிவுடன் இணைந்து, கடற்படை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் திருகோணமலை பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, இலங்கை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டு வந்து சுழியோடியை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நீருக்கடியில் புத்தாண்டு விழாவில், சமையல் செயல் விளக்கங்கள், நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் பல கலாச்சார கூறுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
