Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநீரோடையில் சிறுமி சடலமாக மீட்பு: நாகவில்லுவில் பேரதிர்ச்சி!

நீரோடையில் சிறுமி சடலமாக மீட்பு: நாகவில்லுவில் பேரதிர்ச்சி!

  • நாளை 2-வது பிறந்தநாள்: விளையாடிக்கொண்டிருந்த பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த பெருந்துயரம்!
  • வீட்டு முற்றத்தில் விளையாடிய 2 வயது சிறுமி நீரோடையில் சடலமாக மீட்பு: நாகவில்லுவில் பேரதிர்ச்சி!
  • பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாரான வீடு… கண்ணீரில் மூழ்கிய குடும்பம்: புத்தளத்தில் சோகம்!

நாளை பிறந்தநாள் காணவிருந்த பிஞ்சு உயிர் நீரோடையில் பறிபோன சோகம்: நாகவில்லுவில் உறைந்த மக்கள்!

ஒரு குடும்பமே நாளை விடியப்போகும் நாளுக்காகப் பூரிப்போடு காத்திருந்தது. மகளின் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாரான அந்த வீட்டில், இப்போது மரண ஓலமும் தீராத கண்ணீரும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. சில வினாடிகளில் திசைமாறிய ஒரு விளையாட்டு, புத்தளம் நாகவில்லு கிராமத்தையே மீள முடியாத பெருந்துயரத்திற்குள் தள்ளியுள்ளது.

புத்தளம், நாகவில்லுவைச் சேர்ந்த ஹஸ்பான் இப்னு ஹனீஸ் – சியாதா தம்பதியினரின் இளைய மகளான ஹஸ்பான் செஷால் லயால் என்ற 2 வயது சிறுமிக்கே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. காலை சுமார் 10.00 மணியளவில், தனது சொந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பெரிய தாயின் வீட்டு வளவுக்குள் தனந்து மூத்த சகோதரியான நான்கு வயது நிரம்பிய ஹனீஷா லயாலுடன் அச்சிறுமி வழமைபோல உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.

சிரிப்பொலியும் துள்ளலுமாய் நகர்ந்த அந்தப் பொழுதில், வளவுக்கு அருகிலிருந்த நீரோடையின் பக்கம் சிறுமி சென்றதை எவரும் கவணிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக கால்தவறி அந்த நீரோடைக்குள் சிறுமி வீழ்ந்து நீரில் மூழ்கி சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறுமியைக் காணாது பதறிப்போன குடும்பத்தினர், சுற்றிலும் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். ஆழமில்லாத, குறைந்த அளவிலான நீரே ஓடிக்கொண்டிருந்த அந்த நீரோடையில் சிறுது தூரம் இழுத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி, புதர்களுக்கு இடையே சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சிறுமியை உடனடியாகப் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டு சென்றனர். ஆனால், வைத்தியசாலை வாயிலை அடைவதற்கு முன்பாகவே அந்தப் பிஞ்சு உயிர் பிரிந்துவிட்டதாகப் பரிசோதித்த வைத்தியர்கள் கைவிரித்தனர்.

மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முழு ஊரையும் உரையவைத்த இந்த எதிர்பாராத மரணம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular