நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் சென்றனர். அதேபோல் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.