இந்த உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது பெண்கள் மட்டுமின்றி விலங்குகள் மீதான வன்முறையும் கூட அதிகரித்துவிட்டது.
குறிப்பாக விலங்குகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
பசுவிடம் ஒருவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்துள்ளது.
பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் தான் இது நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பண்ணையில் இருந்து போலீாருக்கு அழைப்பு வந்துள்ளது.
பண்ணையில் வேலை செய்து வந்த நபர் பசுக்கள் உள்ள இடத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவர்களும், போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த தொழிலாளி வேலை செய்து வந்த பண்ணையில் இருந்த மாட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது அந்த பசு உதைத்ததில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். மாடு உதைத்ததில் மாரடைப்பு ஏற்பட்டு, 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர். பசுவிடம் அத்துமீற முயன்ற அந்த நபருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.