பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த மோதல்களால், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான், லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 290 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சுமார் 1900 பேர் கைது செய்யப்பட்டுள்னர்;.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் லாகூர் இல்லமும் பிரிஐ கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரிஐ கட்சியின் உபதலைவர் பவாத் சௌத்தி, செயலாளர் நாயகம் அசாத் உமர் ஆகியோரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.