கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6:40 தொடக்கம் 7:30 மணி வரையும், அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் 2.00 மணி வரையும் கனரக வாகனங்கள் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி போலீஸாரின் மனித நேய செயலாகவும், முன்னுதாரணமான நடவடிக்கையாகவும் இந்த அதிரடி முயற்சிக்கு பொதுமக்கள் நன்னாரி தெரிவித்துள்ளனர்.
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், கிளிநோச்சி பாடசாலை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, பாடசாலை நாட்களில் தடைசெய்யப்பட்ட பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் கிளிநொச்சி நகர பகுதிகளுக்குல் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ளிநொச்சி நகர பகுதிகளுக்குல் கனரக வாகனங்கள் செலுத்த மட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில், குறித்த கனரக வாகனங்கள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.