Sponsored Advertisement
HomeLocal Newsபாராளுமன்றில் சரமாரியாக கேள்வி எழுப்பிய கபீர் ஹாஷிம்!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி எழுப்பிய கபீர் ஹாஷிம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகரான தொகையே 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகை 1.4 டிரில்லியன் ரூபாவாகும் என சுட்டிக்காட்டினார்.

“2024ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 1.4 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு  இடைக்கால கணக்கறிக்கையில் 1.4 டிரில்லியன் ரூபா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எண் ஒன்றுதான், வித்தியாசம் இல்லை. எங்கே குறைக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் நோ சேன்ஞ், அநுர சேன்ஞ். எங்களுக்கு விளக்கவும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

அது நல்லது. IMF ஒப்பந்தத்தின் கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அதன் உள்ளடக்கங்களில் சிலவற்றை மாற்றுவோம் என்று கூறியிருந்தோம்” என்றார்

Exit mobile version