Sunday, December 22, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபார் அனுமதி இரத்து செய்யப்படுமா, இல்லையா?

பார் அனுமதி இரத்து செய்யப்படுமா, இல்லையா?

சட்ட விரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளBar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) சாணக்கியன் தெரிவித்தார்.

Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு தான் எழுப்பிய கேள்விக்கு அமைய Chief Government Whips அவர்கள் கடந்த 03 ஆம் திகதி மாலை அந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். அதற்கமைவாக ஆளும் கட்சியினுடைய சபைக்குரிய தலைவர் பிமல் ரத்னாயக்க அவர்கள் நேற்று மாலை வேளையில் அப் பட்டியலினை வெளியிட்டிருந்தார். 

அந்தப் பட்டியலில் Bar Permit பெற்றுக் கொண்டோருடைய பெயர்கள் மாத்திரம் காணப்பட்டதே தவிர வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இவ்வாறான விண்ணப்பங்கள் வருகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சு கடிதங்கள், ஏனைய விண்ணப்ப விடயங்கள் தற்போது எங்கே உள்ளதென்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது CID அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 18 Bar Permits வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆகவே 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar எனும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூறுவதுடன் அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Bar Permit தொடர்பிலான இந்த கேள்வியை எழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இச் சபையிலே இக் கேள்வியை தொடுத்தேன் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular