புத்தளம், பாலாவி அஷ்ரப் வீதி கொங்கிரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டது.
புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட பாலாவி அஸ்ரப் வீதி, சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் கொங்கிரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த வீதி அபிவிருத்திப் பணியானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் M.R. சன்சைன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்க முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, புத்தளம் பிரதேச சபையின் தலைவர் ரதிக அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த செயற்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட இப்பாதை, மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது நவீன முறையில் கொங்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களின் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான பயணச் சூழலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமது கோரிக்கையை ஏற்று துரித கதியில் வீதியை புனரமைத்து தந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அஸ்ரப் வீதி வாழ் பொதுமக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இதன் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளாரும், புத்தளம் மாநகர சபையின் உறுப்பினருமான ரணீஸ் பதூர்தீன் அவர்களும் கலந்து சிறபித்தமை குறிப்பிடத்தக்கது.





