Tuesday, July 1, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுகையிரத நிலைய அதிபர் – தரம் III ஆட்சேர்ப்பு!

புகையிரத நிலைய அதிபர் – தரம் III ஆட்சேர்ப்பு!

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவியில் காணப்படும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 2025.07.14 ஆம் திகதியன்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 30 வயதுக்கு மேற்படாத இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. (அதன்படி, 2007.07.14 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ மற்றும் 1995.07.14 ஆம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.)

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.07.14 ஆகும். இப்பரீட்சை 2025 செப்டம்பர் மாதம் நடத்தப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,
நிறுவன பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவு,
த.பெ. 1503, கொழும்பு.

பதவியின் கடமைப் பொறுப்புக்கள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் கீழ் உள்ள புகையிரத நிலையங்களின் பணிகளுடன் தொடர்புடைய வகையில், புகையிரதப் பொது முகாமையாளரின் பிரதிநிதியாகச் செயற்பட்டு, புகையிரதப் பொது முகாமையாளரால் குறிப்பாக ஒதுக்கப்படும் ஆளணி நிர்வாகம், நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள், இயக்கப் பணிகள், பயணச்சீட்டு மற்றும் கணக்குப் பணிகள் உள்ளிட்ட பல்பணித் தன்மை வாய்ந்த கடமைகளையும் மேற்பார்வைப் பணிகளையும் நிறைவேற்றும் உத்தியோகத்தர் குழாம் ஆகும்.

சம்பள அளவுத்திட்டம் (Salary Scale)

புகையிரத நிலைய அதிபர் தரம் III இற்குரிய சம்பள அளவுத்திட்டம் (RA.P.C. 10/2025):

ரூ. 57,810 – 5×890 – 5×1030 – 5×1300 – 10×1340 – ரூ. 93,810/=

கல்வித் தகைமைகள் (Educational Qualifications)

I. க.பொ.த. (சாதாரண தரம்)

சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றுடன் மேலும் இரண்டு பாடங்களில் C சித்திகளுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்;

மற்றும் (AND)

II. க.பொ.த. (உயர் தரம்)

க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் (பொதுப் பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்)

பரீட்சை நடைபெறும் நகரங்கள்

விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் நகரத்திற்குரிய இலக்கத்தைக் குறிப்பிடவும்.

நகரம்நகர இலக்கம்
கொழும்பு01
கம்பஹா02
களுத்துறை03
கண்டி04
மாத்தளை05
நுவரெலியா06
காலி07
மாத்தறை08
ஹம்பாந்தோட்டை09
யாழ்ப்பாணம்10
மன்னார்11
வவுனியா12
முல்லைத்தீவு13
கிளிநொச்சி14
மட்டக்களப்பு15
அம்பாறை16
திருகோணமலை17
குருநாகல்18
புத்தளம்19
அனுராதபுரம்20
பொலன்னறுவை21
பதுளை22
மொனராகலை23
இரத்தினபுரி24
கேகாலை25
RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular