வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் 11 பிரிவுகள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மெஹெவர பியச கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சில பிரிவுகள் சிமந்த்ரா கட்டட வளாகத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹெமசந்திரா தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
அதன்படி 11 பிரிவுகள் தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள பத்தரமுல்ல, கனஹேன, இல. 465 என்ற (சிமந்திரா கட்டடத்தில்) நிறுவப்பட்டது.
அவ்வாறே நிறுவப்பட்ட பிரிவுகள்;
1.நலன்புரிப் பிரிவு
2.ஒருங்கிணைப்புப பிரிவு
3.வெளிநாட்டு உறவுகள் II பிரிவு
4. வணிக சிக்கல்களை தீர்க்கும் பிரிவு
5.நிறுவன மற்றும் தொழில் பயிற்சிப் பிரிவு
6.ஆய்வு பிரிவு
7.சந்தைப்படுத்தல் பிரிவு
8.பிரதி பொது முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
9.சிரேஷ்ட முகாமையாளர் (சமூக அபிவிருத்தி)
10.IM Japan பிரிவு
அதன்படி இன்று (01) முதல் மேற்படி பிரிவுகளின் சேவைகள் புதிய இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடுகள் இல்லாததால், வளர்ந்த நாடுகள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளைத் திறந்து வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு அரசாங்கமாக நாங்கள் ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேலுடன் மட்டுமே வெளிநாட்டு வேலைகளை வழங்க தலையிடுகிறோம். புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெறுவதற்காக இந்த மூன்று நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஜப்பானில் இருந்து பல சிறப்பு பிரதிநிதிகள் கடந்த சில நாட்களில் எங்களுடன் கலந்துரையாடினர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
