ஜூட் சமந்த
புதையலில் இருந்து பெறப்பட்டதாகக் கூறி ரத்தினக் கல்லை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பேர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று 2.10.2025 கல்பிட்டி, திஹலிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் வென்னப்புவ – லுனுவில, கல்பிட்டி – ஆலங்குடாவ மற்றும் கல்பிட்டி – திஹாலிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் 56, 54 மற்றும் 34 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதையலில் இருந்து பெறப்பட்ட ரத்தினக் கல்லை விற்பனை செய்யத் தயாராகும் குழு குறித்து நொரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நிலையில் எதிர்வரும் 11 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.