மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் ஆட்சியை புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரதிகவின் தலைமையிலான சுயேச்சை குழு1 பிடித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற புத்தளம் பிரதேச சபையின் கன்னி அமர்விலே சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
தவிசாளர் பதவிக்கு ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அகில மற்றும் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக சஞ்சீவ ஆகியோர் போட்டியிட்டனர்.
இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக 13 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அகில 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக 3 வாக்குகளினால் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக சஞ்சீவ புத்தளம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை உப தவிசாளருக்காக பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் லரீப் காசிம் ஆகியோர் போட்டியிட்டனர்.
இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி 13 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் லரீப் காசிம் 11 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக 2 வாக்குகளினால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.