புத்தளம் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமனம் பெற்றுள்ள திருமதி S. P. விதானகே அவர்களை, புத்தளம் மாநகர முதல்வர் ரின்ஷாட் அஹமட் தலைமையிலான குழுவினர் சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
புதிய பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பிரதேசத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
புதிய செயலாளரின் பதவிக்காலத்தில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் தேவைகள் விரைவாகவும் வினைத்திறனுடனும் நிறைவேற்றப்படும் என இதன்போது நம்பிக்கை வெளியிடப்பட்டது.
இந்த வாழ்த்து விஜயத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





