புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களினால் பொத்துவில்லு பிரதான வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நாட்டின் பல பாகங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் புத்தளம் நாகவில்லு பகுதி அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.
அதிலும் நாகவில்லு, பொத்துவில்லு பிரதான வீதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்து மக்கள் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிறமப்பட்டனர்.
இவ்வாரு பாதிக்கப்பட்ட வீதியினை மிக அவசரமாக திருத்தம் செய்ய பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களினால் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வீதி திருத்தும் பணிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தன.
பிரதேச சபை உறுப்பினரின் குறித்த வேண்டுகோளுக்கினங்க மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாகவில்லு, பொத்துவில்லு பிரதான வீதியின் பாதிக்கப்பட்ட வீதி சுமார் 107 மீட்டர் நீளமும் 12 அடி அகலமும் கொங்கிரீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டு வீதி புனரமைக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் ஊடாகவே பொத்துவில்லு மற்றும் அட்டவில்லு பிரதேச மக்கள் பயணங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முற்றாக சேதமடைந்திருந்த பொத்துவில்லு பிரதான வீதியின் குறித்த பகுதியை முழுமையாக திருத்தி தந்தமைக்காக பொத்துவில்லு மற்றும் அட்டவில்லு பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம்.ரிஜாஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை விஷேட அம்சமாகும்.