முழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரொனா பெருந்தொற்று எம் நாட்டிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்திவருகிறது. இவ்வாரானதொறு நெருக்கடியான நிலையில் நாட்டில் அனைத்து அரச பணியாளர்களும் பல தியாகங்களுக்கு மத்தியில் தங்கள் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வகையில் வைத்தியர்கள், இராணுவத்தினர், பொலிசார், என பலதரப்பட்ட அரச தரப்பினரும் தியாகங்களை செய்துவருகின்ற நிலையில், பொது சுகாதார பரிசோதகர்களின் தியாகங்கள் இங்கு உற்றுநோக்கப்படவேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் புத்தளம் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகளும் தியாகங்களும் இங்கு நினைவுகூறத்தக்கது.
இலங்கை திருநாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா இரண்டாம் அலை தற்போது பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், லட்சக்கனக்கான மக்களின் வாழ்வாதாரங்களும், பொருளாதாரமும் முடங்கி காணப்படுகினறது. இந்நிலையில் இரவு பகல் பாராது கலப்பணியில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டியது பொதுமக்களாகிய எம் அனைவரினதும் கடமையாகும்.
புத்தளம், கல்பிட்டி, வணாத்தவில்லு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகள் புத்தளம் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்கானிக்கப்படுகிறது. தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு என். சுரேஷ் அவர்களின் தலைமையில் இயங்கும் இக்குழுவில் 8 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றுகின்றனர்.
சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட குறித்த பிரதேசங்களை, குறுகிய எண்ணிக்கையுடைய பொது சுகாதார பரிசோதகர்களே கண்கானித்து கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு சுகாதார பரிசோதகருக்கு சுமார் 12 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட பகுதியே பொறுப்பாக இருக்கும்பட்சத்தில், தற்போது ஒரு சுகாதார பரிசோதகருக்கு 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட பகுதியை கண்கானிக்கவேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நல்லிரவு வரை தங்கள் பணியை செய்வதாக அறியக்கிடைத்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் புத்தளம், கல்பிட்டி, வணாத்தவில்லு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இதுவரை 492 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் பொது சுகாதார பரிசோதகராக சுமார் 22 வருடங்கள் கடமையாற்றும் தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு என். சுரேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஏனைய அனைத்து பரிசோதகர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் மிகவும் ஒத்துழைத்து, நாட்டிலிருந்து இக் கொரோனா பெருந்தொற்றை விரட்டியடிக்க அனைவரும் முன் வரவேண்டும்.
உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடமைபுரியும் நாட்டின் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களின் சேவையினை பாராட்டி நன்றி தெரிவிப்பதில் மகிழ்வுகொள்கிறது eNews1st குழுமம்.