Sunday, November 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளம் மேயராக மாநாட்டில் பங்கேற்ற இஷாம் மரிக்கார்?

புத்தளம் மேயராக மாநாட்டில் பங்கேற்ற இஷாம் மரிக்கார்?

புத்தளம் மாநகரசபை மேயர் பதவியின் பெயரை தவறாக பயன்படுத்தி சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட மாநகரசபை உறுப்பினர்

புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக செயற்பட்டு வரும் இஷாம் மரிக்கார் , சமீபத்தில் துபாயில் இடம்பெற்ற ASIA PACIFIC CITIES SUMMIT & MAYOR’S FORUM எனும் சர்வதேச மாநாட்டில், புத்தளம் மேயராக தன்னை பொய்யாக அறிமுகப்படுத்தி கலந்துகொண்டுள்ளார் என புத்தளம் மாநகரசபை கண்டனம் தெரிவித்துள்ளது.

Eng.ரினாஸ் அஹமட் அவர்கள் ,மாத்திரமே தற்போது புத்தளம் மாநகர சபையின் மேயர் எனவும், அவர் தவிர யாருக்கும் மாநகர சபையின் சார்பில் மேயராகவும் அல்லது சர்வதேச ரீதியில் பிரதிநிதியாகவும் இருப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் குறித்த மாநகரசபை தெரிவித்துளளது.

புத்தளம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறித்த விடயம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான தவறான அறிமுகம் ஒரு மோசமான பொது நம்பிக்கைக்கேடு மட்டுமல்லாது, அரசியல் மற்றும் நிர்வாக ஒழுங்குகளுக்கு முற்றிலும் முரணானது. இச்செயல், எமது நகராட்சியின் நற்செயல்களையும், நம்பிக்கையும் பாதிக்கக்கூடியதாகும்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்சி என குறித்த முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாநகர சபை எப்போதும் தெளிவான நிர்வாகம், பொறுப்புணர்வு மற்றும் நேர்மையை முன்னேற்றுவதாக உறுதி செய்வதாகவும், எதிர்காலத்தில் இத்தகைய தவறான நடவடிக்கைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுது.

இதேவேளை கல்வி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளையும் சேர்ந்த Chamber of Commerce அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை கனடா வர்த்தக கவுன்சிலினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கை குழாமில் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர் விஷம் மரிக்கார் அவர்களின் சகோதரர் இல்ஹாம் மரிக்கார் இணைந்து கனடா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular