புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளரின் பதவியேற்பு நிகழ்வு.
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
புத்தளம் வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக, உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி ஏ.எஸ்.நஸ்லியா நேற்று வியாழக்கிழமை (08) காலை தனது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
10 வருடங்கள் வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி ஏ.அஸ்கா வலயக்கல்விப்பணிமனைக்கு இடமாற்றம் பெற்றுள்ளதை அடுத்து, வடக்கு கோட்டத்தின் புதிய பணிப்பாளராக திருமதி ஏ.எஸ்.நஸ்லியா நியமிக்கப்பட்டுள்ளார்.
வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
10 வருடங்கள் பணியாற்றிய பணிப்பாளர் ஏ.அஸ்காவின் சேவைகளை பாராட்டி நினைவு கூறப்பட்டு, நன்றி தெரிவிக்கப்பட்டதோடு , புதிய பணிப்பாளருக்கு அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


