புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு இதுவரை இல்லாத பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் இம்முறை அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னால் உயர்ஸ்தானிகரும் புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் தலைவருமான இப்ராஹீம் அன்சார் தெரிவித்துள்ளார்.
எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ரமழான் மாதத்தின் மார்க்க கடமைகளை நிறைவுற்றுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாரான ஒரு காலப்பகுதியில் ரமழான் மாதத்தில் நன்மையை நாடி ஊரவர்கள் மற்றும் வெளியூர் தனவந்தர்களும் பேரீத்தம்பழங்களை எமது பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோ கிராமிற்கும் அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை எமது ஊர் மீதும் பள்ளிவாசல் மீதும் வைத்துள்ள அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக பள்ளிவாசல் தலைவர் இப்ராஹீம் அன்சார் தெரிவித்துதார்.
கிடைக்கப்பெற்ற அனைத்து பேரீத்தம்பழங்களையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இரவு பகல் பாராது நீதமான முறையில் மக்களுக்கு பகிர்ந்தளித்ததாகவும், குடும்பம் ஒன்றிற்கு சுமார் 3 கிலோ வரையான பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாடுபட்ட பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அன்பளிப்பு செய்த நல்லுள்ளங்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்களுக்கு நன்றி தெரிவிப்பதாகுவும் அவர் eNews1st ற்கு தெரிவித்தார்.