புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு இலவச பிராணவாயு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சில பரோபகாரிகளின் உதவியுடன், முன்னாள் பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினரும், கம்பகா மாவட்ட மனித உரிமை சமாதான தூதுவரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஜனாப் MAC கமால்தீன் அவர்களினால் இன்று (02.08.2021) புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர் Dr. தஸ்லீம் அவர்களிடம் இவ் மருத்துவ உபகரணம் கையளிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்தியசாலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்ற நிலை உருவாகி பிராணவாயு விற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொவிட் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுகளில் செயற்கை சுவாசத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டி வைத்தியசாலைக்கு இவ் பிராணவாயு உபகரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
மேலும் சில மருத்துவ உபகரணங்களுக்கு இவ் வைத்தியசாலையில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், முடியுமானவரை அவைகளை பெற்றுத்தருமாறும் இதன்போது ஜனாப் MAC கமால்தீன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வினை முடிந்த வரை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்தியர் Dr.K அஸ்பர், பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.