Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபெட்ரோல், டீசல் குறித்து முக்கிய அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் குறித்து முக்கிய அறிவிப்பு!

  • எரிபொருள் விலை அதிகரிக்குமா? சிபெட்கோ தலைவர் வெளியிட்ட அதிரடித் தகவல்!
  • ஷெட் வாசலில் வரிசையில் நிற்க வேண்டாம்: பெட்ரோல், டீசல் குறித்து முக்கிய அறிவிப்பு!
  • இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா? உண்மை பின்னணி இதோ!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயருமா அல்லது பழையபடி வரிசை யுகம் திரும்புமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மக்களுக்கு நிம்மதி தரும் தீர்க்கமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிபெட்கோ தலைவர் டி.ஜே. ராஜகருணா, இம்மாத இறுதி வரை உள்நாட்டில் எரிபொருள் விலைகளில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அத்துடன், எதிர்பாராத சர்வதேச அல்லது உள்ளூர் நெருக்கடிகள் ஏதும் ஏற்படாவிடின், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கும் தற்போதைய விலையையும் தடையற்ற விநியோகத்தையும் தொடர்ந்து பேண முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

ஆனால், சில குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தமது விநியோகத்தைக் குறைத்துள்ளமையே இதற்கு முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நெருக்கடி நிலை உருவாகக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட 62 பகுதிகள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னரே உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில், குறித்த பகுதிகளுக்குத் தடையின்றி கூடுதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு உரிய நிறுவனங்களுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

இதனால் நாட்டில் எரிபொருள் தொடர்பில் எவ்வித பாரிய தட்டுப்பாடோ அல்லது நெருக்கடியோ ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என உறுதியளித்த தலைவர், சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவும் உண்மைக்குப் புறம்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, வீண் பதற்றமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும், தனியார் நிறுவன ஷெட்களில் நெரிசல் காணப்பட்டால் அருகிலுள்ள சிபெட்கோ நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்பு பாதுகாப்பான மட்டத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய அவர், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விசேட மீளாய்வு நடத்தப்படுவதாகக் கூறினார். அதன்படி இன்றைய மீளாய்வின் போது, நாட்டின் தேவையை விடக் கூடுதலான அளவு எரிபொருளைக் கொண்டு மேலும் இரண்டு கப்பல்களை உடனடியாக வரவழைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular