பெண் ஒருவர் மீது அசீட் தாக்குதல் நடத்தி காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்கு மாவத்தகம காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
சந்தேக நபரான கலவான, வெட்டகல பகுதியைச் சேர்ந்த அபேசிங்கே டான் மங்கள புஷ்பகுமார அபேசிங்கே (44) என்பவருக்கு, இரத்தினபுரி மற்றும் கலவான நீதவான் நீதிமன்றங்கள் கைது பிடியாணை பிறப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் மாவத்தகம காவல்துறை பொறுப்பதிகாரியை 071 8591258 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.


