பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்
விடயதானத்திற்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் மற்றும் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தம் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் விடயதானத்திற்குரிய அரச கொள்கைகளின் முன்னுரிமைக்கமைய, 2025 ஆம் ஆண்டில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சட்டங்களைத் தயாரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, கீழ்க்காணும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் சட்டங்களைத் திருத்தம் செய்தல் 2025 ஆம் ஆண்டின் அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதற்காக பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 1958 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் (கூறுபோடல் கட்டுப்பாட்டு) சட்டத்தைத் திருத்தம் செய்தல்
• 2005 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க , சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற சட்டத்தைத் திருத்தம் செய்தல்
• 2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேயிலைச் சக்தி நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
• 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
• 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
• பெருந்தோட்ட முகாமைத்துவச் சட்டமெனப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்
• துருசவிய சங்கங்களின் அதிகாரங்களை இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
• 1971 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க தெங்கு அபிவிருத்திச் சட்டத்தைக் சமகாலத் தேவைகளுக்கேற்ப புதிய ஒழுங்குவிதிகளை உள்வாங்கக் கூடிய வகையில் குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்தல்
• 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தேயிலை சபைச் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளல்