கிளிநொச்சி, தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்றைய தினம் (30.06.2025) மயில்வாகனபுரம் கொழுந்துப்பிலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை தர்மபுரம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய குடும்ப பெண் ஒருவரும் பொலிசாரால் குறித்த சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்து புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் தடையப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J. திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கேரள கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
