ஜூட் சமந்த
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) அமைப்பாளர் ஒருவர் மது அருந்திவிட்டு, ஆனமடுவ பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று 16 ஆம் தேதி அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
SLPP-யின் ஆனமடுவ அமைப்பாளரும், ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான உதார மதுசங்க என்ற நபரே இவ்வாறு தகராரில் ஈடுபட்ட நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று 16 ஆம் தேதி அதிகாலையில் வீதியில் அதிக சத்தம் எழுப்பிச் சென்ற மோட்டார் காரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். சோதனை செய்தபோது, ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரே அதை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
அப்போது, சந்தேகத்திற்குரிய முன்னாள் தலைவரும் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.