ஜூட் சமந்த
3.2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மதுரங்குளிய – பத்தாயம சந்தியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரங்குளிய – ஜின்னாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிப் பகுதிகளில் இருந்து கேரள கஞ்சாவை கொண்டு வந்து அவர் வசிக்கும் கிராமங்களுக்கு விநியோகித்த ஒருவர் என்றும், புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, சந்தேக நபர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரையும் அவரது வசம் இருந்த கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.