நூற்று மூன்றாவது (103) சர்வதேச கூட்டுறவு தின விழா நேற்று மன்னார், அடம்பன் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில், மன்னார் மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் திரு.ரினீஸ் பெர்னாண்டோ தலைமையில் கடந்த 08.07.2025 அன்று வெகு விமர்சைக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு. திருலிங்கநாதன் அவர்களும், சிறப்பு அதிதியாக மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப். ஹக் முகம்மது அரூஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு திணைக்களத்தில் 25 வருடங்கள் மகத்துவமிக்க சேவையை வழங்கிய ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், சர்வதேச கூட்டுறவு தினம் பற்றியும், மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் குறித்தும் மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப். ஹக் முகம்மது அரூஸ் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார்.
இதேவேளை மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப். ஹக் முகம்மது அரூஸ் அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
