மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய நுலைவாயில் மற்றும் சுவர் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஜனாப் என்.எம். ஷாபி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை நுலைவாயில் உட்பட சுமார் 300 மீற்றர் வரையான சுவர் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
எருக்கலம்பிட்டி ஐடியல் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (72) அமைப்பின் பூரண அணுசரனையில் இடம்பெறும் இவ் வேளைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போது, அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவிருக்கும் குறித்த நுலைவாயில் மற்றும் சுவர் கட்டுமான பணியை பாடசாலையின் அதிபர் வெகுவாக பாராட்டியதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளில் பங்களிப்பு செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், எருக்கலம்பிட்டி ஐடியல் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் உட்பட ஏனைய நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.