Sponsored Advertisement
HomeMuslim Worldமருத்துவமனைகளை குறி வைக்கும் குண்டுகள்! சிதறும் மனித உடல்கள்

மருத்துவமனைகளை குறி வைக்கும் குண்டுகள்! சிதறும் மனித உடல்கள்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல் 36வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது. எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர்.

https://enews1st.lk/wp-content/uploads/2023/11/YVGC9_lTztEWCCXn.mp4

ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது. எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக் கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக் கொண்டனர்.

சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.

ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. இவ்வாறான நிலையில் ஆரம்பமான மோதலில் இஸ்ரேல் கண்மூடித்தனமான பல தாக்குதலில் இறங்கியது. இப்படி 36வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 4,506. காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷிஃபா மீது இஸ்ரேல் ராணும் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 13 பேரும், பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறுகையில்,

ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கீழ் சுரங்கங்களை அமைத்து தங்களை தற்காத்து வருகின்றனர். அப்பாவி பொதுமக்களை அவர்கள் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று பள்ளி மற்றம் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நீடித்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதேபோல ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”

Exit mobile version