பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 16 வயதின் கீழ் போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை சாம்பியன் ஆனது.
கடந்த 21 ஆம் திகதி குருநாகல் மல்லியதேவ பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி தற்போது இரு தினங்களாக இடம்பெற்றுவருகிறது.
இதில் 16, 18, 20 வயது பிரிவுகளுக்கியிடையேயான போட்டிகள் இடம்பெற்று வருவதுடன் 16 வயது பிரிவிற்கான சுற்றுப்போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மற்றும் கட்டுனேறிய புனித செபாஸ்டியன் கல்லூரிகள் இறுதிப்போட்டியில் மோதின.
ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் எதுவித கோள்களும் போடாத நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
தண்ட உதை மூலம் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை 4 கோள்களையும் கட்டுனேறிய புனித செபாஸ்டியன் கல்லூரி 3 கோள்களையும் பெற்றுக்கொண்டன. மேலதிக ஒரு கோல் மூலம் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை 16 வயது பிரிவில் சாம்பியன் ஆனது.
இவ்வெற்றிக்காக பாடுபட்ட வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..