ஜூட் சமந்த
மாதம்பே பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பெரும்பான்மை அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற குழுக்கள் இணைந்து கைப்பற்றியுள்ளன.
கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தேர்தலில், மாதம்பே கூட்டுறவு சங்கத்தின் 25 பிரதேச பிரிவுகளுக்காக 85 பொதுச் சபை பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி,
• தேசிய மக்கள் சக்தி (NPP) ஆதரவு பெற்ற குழு: 36 உறுப்பினர்கள்.
• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவு பெற்ற குழு: 36 உறுப்பினர்கள்.
• ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவு பெற்ற குழு: 13 உறுப்பினர்கள்.
இந்த முடிவுகளின் அடிப்படையில், பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற குழுக்கள் ஒன்றிணைந்து மாதம்பே கூட்டுறவு சங்கத்தின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது


