மாத்தறையின் அன்புடன் பதுளைக்கு நிவாரணம்
826 பேர் கொண்ட ஒரு பெரிய தன்னார்வலர்கள் குழு 5 நாள் நடவடிக்கையைத் தொடங்குகியுள்ளது.
பதுளை மாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த 826 பேர் கொண்ட ஒரு பெரிய குழு நேற்று (01) பதுளைக்கு வருகை தந்துள்ளது.
பதுளை மாவட்டத்தை பாதித்த பேரிடர் சூழ்நிலைக்குப் பிறகு இந்த சகோதரத்துவ மனித நேய செயற்பாடு மிகவும் வலுவான சகோதரத்துவத்தின் பங்களிப்பை நாட்டுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
சேதமடைந்த பகுதிகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் வந்த இந்த குழுக்கள், அடுத்த 5 நாட்களுக்கு பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல முக்கிய பகுதிகளுக்கு தன்னார்வ பங்களிப்புகளை வழங்க உள்ளன.
அதன்படி, இந்த நடவடிக்கை பதுளை, லுனுகல, பசறை, சொரணத்தோட்ட, கண்டகெட்டிய, நெகஹகிவுல, வெலிமட, ஊவா பரணகம மற்றும் ஹாலி கால்வாய் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக வந்த மாத்தறை குழுவினர், தங்கள் உழைப்பை மட்டுமல்லாமல், பேக்கோ இயந்திரங்கள், எஸ்கவேட்டர்கள், செயின்சாக்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் போன்ற அத்தியாவசிய இயந்திரங்களையும் கொண்டுவந்துள்ளதுடன், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, தன்னார்வ குழுக்களுக்கு தேவையான அடிப்படை பராமரிப்பை வழங்கவும், தன்னார்வ குழுக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யவும், தேவையான பணித் திட்டத்தின்படி உபகரணங்களுடன் அவர்களை தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மாத்தறையில் இருந்து வந்த இந்த மிகப்பெரிய நிவாரணக் குழு, ஒரு கடினமான சூழ்நிலையில் பதுளைக்கு அவர்கள் வழங்கும் மிகப்பெரிய ஒரு ஆதரவாக இது கருதப்படுவதுடன், பதுளை மக்கள் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


