Saturday, February 1, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமியான்மர் அகதிகள் குறித்து வாய் திறந்த சஜித்!

மியான்மர் அகதிகள் குறித்து வாய் திறந்த சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) பாராளுமன்றத்தில் ரோஹின்யா மக்களின் உரிமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரை பின்வருமாறு,

ரோஹின்யா சமூகம் அகதிகளாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, குறிப்பாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ரோஹின்யா மக்கள் உட்பட அகதி சமூகத்திற்கு சர்வதேச கொள்கைகளின் மற்றும் புரிந்துணர்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது.

1951 refugee convention , 1967 protocol to the refugee convention ஆகியவற்றில் நாடு என்ற வகையில் நாம் கையெழுத்திடாவிட்டாலும், மனிதாபிமான நிலைப்பாட்டை மையமாகக் கொண்ட நாடாக,  சில அகதிக் குழுக்கள் உருவாகும் போது சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி அந்த செயலை மேற்கொள்ளும் பொறுப்பு நமக்கு உள்ளது.

1969 OAU Convention , 1984 declaration on refugee european refugees, 1954 convention related of people , global impact on refugees போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தீர்மானங்களைப் பார்க்கும்போது, குறிப்பாக ரோஹின்யா சமூகம் மியன்மார் ரகெக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சமூகமாகும். 

2014 ஆம் ஆண்டு மியன்மாரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கடுமையாக வறுமைக்குள்ளான சமூகப் பிரிவு. இந்த மக்கள் பிரிவு அடைந்திருக்கும் வறுமை நிலையில் அந்த அகதிகளுக்கு மனிதாபிமான கொள்கைகள் மூலம் நமது செயல்முறைகளை மேற்கொள்வது மனிதத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். 

2024 டிசம்பர் 19 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரைக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு 116 பேர்கள் கொண்ட அகதிகள் குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் அந்த அகதிகளுக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை சர்வதேச சட்டத்திற்கும் சர்வதேச நடைமுறைகளுக்கும் ஏற்ப பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரோஹின்யா சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அந்த அகதிகளுக்காக நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையை நியாயமாக நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகின்றது என்றும் நாம் நம்புகிறோம். மீண்டும் மியன்மாருக்கு அந்த அகதிகளை அனுப்புவது தீர்வாகப் பார்க்கவில்லை. 

நாம் மனிதாபிமானத்தை முன்நிறுத்தியும் நியாயத்தை முன்நிறுத்தியும் அந்த அகதிகளுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க, அந்த அகதி சமூகத்திற்கு ஒரு நியாயமான மனிதாபிமான மையம் கொண்ட கொள்கையொன்றை இந்த அரசாங்கம் செயற்படுத்தினால், அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம் என தனது உரையில் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular