நாட்டு மக்களின் பால் தேவையை பூர்த்தி செயும் நோக்கிலும், புதிய உற்பத்திகள் பலவற்றை நுகரும் மக்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் 500 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி மில்கோ உற்பத்திக்கான 500 விற்பனை நிலையங்களை (அவுட்லெட்) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய திட்டத்திற்கு இணங்க முதல் 50 விற்பனை நிலையங்கள் மே மாதத்தில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி வாங்கி (RDB) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் போது புதிய தொழில் முயற்சியாளர்களுக்காக அவசியமான கடன் வசதிகளை வழங்குவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB) முன்வந்துள்ளது.
