முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றம் செல்வார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவருடன் இணைந்துகொள்ள உள்ளதாக தெற்கு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில், அவரின் பாருமன்ற பிரவேசம் ஒரு அரசியல் சூறாவளியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் எந்த வகையிலும் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
